
தருமபுரி மாவட்டத்தில் 80 வயது மூதாட்டியின் மீது !கஞ்சா போதையில் குடிகாரர்கள் தாக்கி துன்புறுத்தல்:
காது, மூக்கு, வாய் பிறப்புறுப்பில் ரத்தக்கசிவுகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை

தருமபுரி, பிப்.7:
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூர் அருகே உள்ள வாணியாறு அணை பகுதியில், பிப்ரவரி 2 (திங்கள்) மதியம் 2 மணியளவில், வாணியாறு அணைப்பகுதியில் அருகே உள்ள புங்கை கொட்டை பொறுக்கிக் கொண்டிருந்த சுமார் 80 வயது மூதாட்டி காளியம்மாவை தூக்கிச் சென்று அடித்தும் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் நிலையில். பிறப்புறுப்பு
காது, மூக்கு, வாய் ரத்தம் கசிந்த நிலையில் மூதாட்டி உயிர் பிழைத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புதரில் கிடந்த மூதாட்டியை பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட நிலையில் ரத்தப்போக்கு நிற்காமல் மயக்க நிலையில் உயிருக்கு போராடியதால், முதலுதவி செய்து
தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு ICU வார்ட்டில் சேர்த்து சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மூதாட்டி காளியம்மாள் இறந்துவிட்டதாக நினைத்து குற்றவாளிகள்
ஓடி மறைந்ததாகத் தெரிகிறது.
“சமூக ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டு “

இச்சம்பவத்தில் காவல்துறை மெத்தன்போக்கு காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாணியாறு அணை பகுதி குற்றங்களின் மறைவிடமாக மாறியுள்ளது.
வாணியாறு அணை புதர்களின் மறைவிடமாக இருப்பதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது
பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடங்களில் ஏராளமான முட்புதர்கள் சூழ்ந்து கஞ்சா, மது, சூதாட்டம் போன்ற சமூக விரோத செயல்களுக்கு மறைவிடமாக உள்ளன.
வாணியாறு பகுதியை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின்
உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாகவும்
பழங்குடி மலைவாழ் மக்கள்,
இலங்கை தமிழ் வாழ் மக்கள் பயந்து
வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை:
பாதுகாப்பு,
பொதுப்பணித்துறை பகுதியில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த அல்லது பூங்காக்கள் அமைத்து பராமரிக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு சாதனங்கள் செயல்படாததால் தகவல்கள் அளிப்பதில் சிரமத்திற்குள்ளாகும்
அவல நிலை மாற
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூதாட்டியை துன்புறுத்தி கொடுமைகள் செய்த குற்றவாளிகளைப் பிடித்து தண்டிக்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மூதாட்டியின் மீது நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கையில் தகவல்களை இரண்டு பேர் மட்டும் வந்து தெரிவியுங்கள் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்று தகவல் அளித்துவிட்டு சாதாரணமாக சென்றதால் மலைவாழ் பழங்குடியின மக்களிடையே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது
இச்சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் பாரதி மோகன் அவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டபோது, பாதிக்கப்பட்ட மூதாட்டியை நேரில் சென்று பார்த்து விசாரணை மேற்கொண்டதாகவும், உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிகிச்சைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மூதாட்டியைத் தாக்கியவர்கள் மீது கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்தார்.














Leave a Reply