
சென்னை டிச 23,
100 நாள் வேலைத் திட்ட ஒழிப்பு சட்டத்தை திரும்பப் பெறக் கோரி திமுக சார்பில் தருமபுரி மேற்கு மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்ததை கண்டித்து, அந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்
தருமபுரி மேற்கு மாவட்டம் முழுவதும் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தருமபுரி மேற்கு மாவட்டத் திமுக கழகச் செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை,
“100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டம் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதார உரிமையை பறிக்கும் கொடுமையான நடவடிக்கையாகும். இதற்கு ஆதரவாக அமைதியாக இருந்து வரும் அ.தி.மு.க-வின் உடந்தை அணுகுமுறையும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.
இந்த மத்திய அரசின் மக்கள் விரோதச் சட்டத்தையும், அதற்கு துணைபோன அ.தி.மு.க.வையும் எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாவட்டம் முழுவதும் ஒற்றுமையாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 24, 2025, புதன்கிழமை காலை 10.00 மணிக்கு ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
தருமபுரி மேற்கு மாவட்டத்தில் உள்ள பல ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகங்களை மையமாகக் கொண்டு பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
ஆர்ப்பாட்டங்களில் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தேர்தல் பிரதிநிதிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள், 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் ஒற்றுமையுடன் பங்கேற்று, மத்திய அரசின் இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் என முனைவர் பி. பழனியப்பன் அவர்கள் தனது அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.














Leave a Reply