Categories

தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


உளுந்தூர்பேட்டை டிச 22,

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்பேட்டையில் உளுந்தூர்பேட்டைதெற்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் திருமால் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை செயலாளர் குழந்தைவேல், கலந்து கொண்டார். ஒன்றிய அவை தலைவர் திருவேங்கடம், பொருளாளர் வீராசாமி, துணைச் செயலாளர்கள் முனியன், சிவா, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், நாராயணன், குமார், ராஜ்குமார் முன்னில வகித்தனர். ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணி, சண்முகம், ஏழுமலை, வெங்கடேசன், மணி குமார், கரண், பர்ஷித்,, பாலு, வெங்கடேசன், சிவராமன், பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, பழனிவேல், சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கடலூரில் நடைபெறுகின்ற தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும், தேமுதிக மாநாடு குறித்த துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும், ஒவ்வொரு கிளைகளிலும் பேனர் கொடிகள் ஏற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றனர். நிகழ்ச்சி முடிவில் மணி கண்ணன் நன்றி கூறினார்.