
விழுப்புரம் டிச 25,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான (100 நாள் வேலைத்திட்டம்) பெயர் மாற்றம் செய்தும் வழங்கப்பட்ட ஊதியத்தை குறைத்தும் மாநில அரசின் மீது நிதிச்சுமையை அதிகரித்தும் கிராமப் புற மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த, இந்திய ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காணை தெற்கு வடக்கு மத்திய ஒன்றியத்தை உள்ளடக்கி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கெடார் ஊராட்சியில் உள்ள யூனியன் வங்கி எதிரே மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் காணை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் கல்பட்டு.இராஜா வரவேற்புரை வழங்கினார்,ஆர்ப்பாட்டத்தில்
ஒன்றியக் குழு பெருந்தலைவர் திருமதி நா.கலைச்செல்வி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,மேலும் ஆர்பாட்டத்தில் இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகியும் விக்கிரவாண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி, இந்திய தேசிய காங்கிரஸ் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ், மதிமுக ஒன்றிய செயலாளர் நாகராஜ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட கழக செயலாளர் அஷ்ரப் அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் முருகன், சக்திவேல்,முருகன், சங்கர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சரவணன் உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினார்கள்,
மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் கெடார் ஒன்றிய கவுன்சிலர் கருணாகரன் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா மணி மாவட்ட, ஒன்றிய, சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கிளை கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
செய்தி : விழுப்புரம் மாவட்ட நிருபர்














Leave a Reply