Categories

பல்லடம் அருகே 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது


பல்லடம் நவ 10,
வீட்டில் வைத்து லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்……..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி.இவரிடம் கரடிவாவி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் வடுகபாளையம் பகுதியில் நிலத்திற்கான பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளார்.அதற்கு கிராம நிர்வாக அலுவலரான முத்துலட்சுமி 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கிருஷ்ணசாமி இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளனர்.கிருஷ்ணசாமி பணம் தருவதாக முத்துலட்சுமியிடம் தெரிவித்ததை தொடர்ந்து வடுகபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு வர சொல்லியுள்ளார்.வீட்டிற்கு சென்ற கிருஷ்ணசாமி முத்துலட்சுமியிடம் 20 ஆயிரம் பணம் வழங்கியுள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த விஜிலென்ஸ் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமியை கையும் களவுமாக பிடித்தனர்.

வீட்டில் வைத்து லஞ்சம் வாங்கும் போது கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.