Categories

சண்டிசாட்சியில் மிஷன் வட்சால்யா (Mission Vatsalya) திட்டத்தின் கீழ் நிதி உதவி



விழுப்புரம் டிச 25,

மிஷன் வட்சால்யா (Mission Vatsalya) திட்டத்தின் கீழ் நிதி உதவி ஒற்றை பெற்றோர் உள்ள   குழந்தைகளுக்கு, மாதந்தோறும் 4,000 ரூபாயும், அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாயும், அவர்களின் 18 வயது வரை, பள்ளிப்படிப்பு முடியும் வரை கல்வி மற்றும் தேவைகளுக்காக மாதந்தோறும் கொடுக்கும் நிதியுதவிக்கு, ஏற்பாடு செய்வதற்காக, நம் சமூக சேவை குழு SSW (SOCIAL SECURITY WING – சமூக பாதுகாப்பு படை) ஒருங்கிணைப்பாளர் கார்த்தி  ஒருங்கிணைப்பில், செஞ்சி அருகே சண்டிசாட்சி கிராமத்தில் நடத்தப்பட்ட முகாமில்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மா திட்டம் பற்றி விளக்கி , விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டார், மேலும் , தேவையான ஆவணங்கள் , கொடுக்கப்பட்ட பிறகு, மீதமுள்ள தகுதியுள்ள குழந்தைகளின் விண்ணப்பங்கள் ஏற்க பட உள்ளது, இதில் செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டத்தினை சேர்ந்த பயனாளிகள் பலர்  கலந்து கொண்டனர்.

செய்தி மாவட்ட சிறப்பு நிருபர்          விழுப்புரம்