Categories

ஏரியூர் பஸ் ஸ்டாண்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம்


தருமபுரி டிச 24,
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாத காலமாக
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக  துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது .

     அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பஸ் ஸ்டாண்டில் துப்புரவு பணியாளர் ஊனமுற்றோர் ஏழை எளிய பொதுமக்கள் என ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தடகம் சுப்பிரமணி இன்பசேகரன் தலைமை தாங்கினார் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஒன்றிய கவுன்சிலர் சென்னையன் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி  வழங்கினார்.இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.