Categories

‘நைட் பிரியாணி’ கடையை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்


தர்மபுரி டிச 21,
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மண்டி எதிரில் புதிய ‘நைட் பிரியாணி’ கடையின் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர்
கே.பி. அன்பழகன் தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி கடையின் சேவைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

பின்னர் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி அவர்களைப் பாராட்டிய அவர், சுயதொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் துணைபுரியும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சிக்கு பாஜக நகரத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கரன், தேமுதிக மேற்கு மாவட்டச் செயலாளர் விஜயசங்கர், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்தன், அதிமுக நகரச் செயலாளர் ராஜா, பாமக நகரச் செயலாளர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த திறப்பு விழாவில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, அனைவருக்கும் சுவையான பிரியாணி விருந்தாக வழங்கப்பட்டது.