
கள்ளக்குறிச்சி டிச 21,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் சமீப நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு அலுவலக பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்ததால், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
மழைநீர் தேங்கிய பகுதிகள்
அலுவலக வளாகங்கள்
புகை மருந்து அடிக்கும் நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உளுந்தூர்பேட்டை நகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், பொதுப்பணித்துறை அலுவலகம், சார்பு பதிவாளர் அலுவலகம், வட்டல் வழங்கள் அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.














Leave a Reply