
கோவை டிச 12,
கோவை மாநகராட்சி 74வது வார்டு காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் வரும் 15-ம் தேதி காலை 10 மணியளவில் பல ஆண்டு காலமாக பூசாரிப்பாளையம் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை அடைத்து வைத்துள்ள கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை கண்டித்து அப்பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு :-
கோவை பூசாரிப்பாளையம் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வழித்தடத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மூடி வைத்திருப்பதாகவும்,இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி செல்ல வேண்டி உள்ளது. ஆகவே இந்த வழித்தடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட பல முறை கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆகவே காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவரும்,தமிழ்நாடு மாநில கணக்கு குழு தலைவருமான செல்வ பெருந்தகை அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கணக்கு குழு கூட்டத்திலும் இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டும், வழித்தடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர காலதாமதமாகி வருகின்றது. இதனை தொடர்ந்து கடந்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் தலித் மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த வழித்தடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டி இப்பகுதி மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதநிதியான கோவை மாநகராட்சி கவுன்சிலர் என்ற முறையில் கடந்த மார்ச் மாதம் மனு அளித்துள்ளார். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை வேண்டி 23-102025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவு கடிதம் எண் 408/D5/2025 அன்று அனுப்ப பட்டுள்ளதாக வரும். இக்கடிதத்தில் 22-12-2025 ம் தேதிக்குள் இந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆணையத்திற்கு பதிலளிக்க வேண்டி கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருந்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட தலித் மக்களை திரட்டி வரும் திங்கள் கிழமை இந்த பல்கலைக்கழகத்தின முன்பு மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக கோவை மாநகராட்சி 74வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கர் தெரிவித்துள்ளார்.













Leave a Reply