Categories

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில்,  நான்கு பேர் குடித்துக்கொண்டிருந்ததாக தகவல்.

கோவை நவ 3,

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில், நேற்று  மாலை முதலே நான்கு பேர் குடித்துக்கொண்டிருந்ததாக அப்பகுதியில் உடற்பயிற்சி செய்தவர்கள் தெரிவித்தனர்.



கல்லூரி மாணவி நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, நேற்றிரவு சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார். இதனையடுத்து அப்பெண்ணை அவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல் துறையினர் 7 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து
மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு டிவிஎஸ் எக்ஸல் சூப்பரை திருடியுள்ளனர். அந்த டிவிஎஸ் எக்ஸலில் பலாத்காரம் நடந்த இடத்தில் கிடந்ததை அடுத்து காவல் துறையினர் சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டனர் . சத்தி சாலையிலுள்ள சிசிடிவிக்களை ஆராய்ந்த போது,   மூன்று நாளுக்கு முன் குற்றவாளிகள் டிவி எஸ்  எக்ஸல்லில் செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் தற்போது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



குற்றச்சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமான மதுபாட்டில்கள்,  ஊசிகள்  கிடக்கின்றன.  நேற்று மாலை அப்பகுதியில் உடற்பயிற்சி செய்ய வந்தவர்கள்,, அருகே உள்ள மைதானத்தில் நான்கு பேர் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக தெரிவித்தனர். அந்த இடத்தில் காலி மதுபான பாட்டில்கள், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ஆகியவை சிதறிக்கிடந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே   ஆயிரம் சாலை பகுதியில் 1800 பேர் வசித்து வருகின்றனர்.