Categories

பிஜேபி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

தமிழகத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் தமிழக பாஜக இளைஞர் அணி வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது – 100 கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு பணி ஆணைகளை வழங்கி பாஜக மாநில இளைஞரணி தலைவர் SH சூர்யா பேச்சு

கிருஷ்ணகிரியில் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் தனியார் துறையின் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அவர்., தமிழகத்தில் கல்லூரிகள் அதிகளவில் இருந்தாலும் கல்லூரி படிப்பு முடித்த உடன்      7 சதவீத பேருக்கு தான் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மகளிர் உரிமைத் தொகை எனும் பெயரில் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஒரு குடும்பத்திற்கு வழங்கும் தமிழக அரசு, மது விற்பனை மூலமாக ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாயை திரும்ப பெறுகிறது. மற்ற மாநிலங்களை விட 58 ஆயிரம் கோடி ரூபாய் மது விற்பனை ஆகிறது. தமிழக அரசுக்கு              2 லட்சம் கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைக்கும் நிலையில் மதுவால் மட்டும் 58 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்.

ஒரு நாளைக்கு 96 லட்சம் மது பாட்டில்கள் விற்பனை ஆகிறது. கல்லூரிகள் அதிகம் இருந்தாலும் ஆண்டுக்கு 7 சதவீத பேருக்கு தான் வேலை கிடைக்கிறது. அரசாங்கத்துக்கு வருமானம் வேண்டும் என்பதால் திமுக அரசு, குடி பழக்கம் இல்லாத இடங்களிலும் மதுக்கடைகளை திறந்து மக்களை மது பழக்கத்திற்கு அடிமையாக்கி வருகிறது. மேலும், இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றும் அதிகளவில் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்களை பெற வேண்டும் என்றும்  பாஜக இளைஞர் அணி முழு வீச்சில் பணியாற்றி வருகிறது.
மத்திய அரசின் நேரடி வேலை வாய்ப்புகள் மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் பேரும் மறைமுகமாக 8 லட்சம் பேரும் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். நாட்டில் பயன்படுத்தும் 96 கோடி மொபைல் போன்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய பட்டது என்பது நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் பிரதமர் வழங்கி உள்ளார் என்று கூறினார்.
பின்னர் TATA எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் 30 இளைஞர்கள் தேர்வு செய்ய பட்டதற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் கவியரசு, மாவட்ட இளைஞரணி தலைவர்  பாலாஜி, நகர தலைவர் விமலா உள்ளிட்ட பலர் இருந்தனர்.