Categories

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு – மாநிலச் செயலாளர் பி. சண்முகம் பங்கேற்பு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலைய வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமை தாங்கினார். பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் வரவேற்புரை ஆற்றினார். மாநில குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயலாளர் இரா. சுசுபாலன், மூத்த தலைவர் இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, விஸ்வநாதன், சக்திவேல், ஏரியூர் ஒன்றிய செயலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் சிறப்புரை ஆற்றினார்.அதனைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் பி. சண்முகம் உரையாற்றியபோது கூறியதாவது:“மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளைப் பெறவும் இன்று போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர், சாலை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ந்த போராட்டத்தால் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் வாக்களிக்கப்பட்ட காவிரி உபரி நீர் திட்டத்தை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டியது அவசியம். வாக்காளர் சிறப்பு திருத்தம் ஏன் மேற்கொள்ளப்படுகிறது என்பதை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக விளக்க வேண்டும். ஆனால் அதன் விவரம் வெளியிடப்படவில்லை. பீகாரில் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 5 கோடியே 41 லட்சம் வாக்காளர்களே உள்ளனர்; 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஓட்டுரிமை கையகமில்லாதால் யாரும் மக்களை தேடி வர மாட்டார்கள்; ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் எப்போதும் மக்களைத் தேடி வந்து அவர்களுடன் நிற்கும்.பி.ஜே.பி. தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக பயன்படுத்தி, தமக்கு வாக்களிக்காதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது அதன் நோக்கமாகும். சமீபத்திய பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே மக்களுக்கு எதிரான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தற்போது நிறுத்தப்பட்டு, கிராம சபையின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.100 நாள் வேலைத் திட்டம் ஊருக்கு வேலைவாய்ப்பை அளித்து புலம்பெயர்வை குறைத்தது. ஆனால் மத்திய அரசு அந்தத் திட்டத்தை நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வரும் டிசம்பர் 24ஆம் தேதி தமிழகமெங்கும் வலுவான போராட்டம் நடத்தவுள்ளனர்.வீட்டுமனைப் பட்டா இல்லாதவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கி, பென்னாகரம் மாவட்ட தலைமையகம் மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.”மாநாடு முடிவில் நகரச் செயலாளர் செல்வம் நன்றியுரை ஆற்றினார்.