Categories

சென்னையில் செவிலியர்கள் கைது – கண்டித்து தருமபுரியில் காத்திருப்பு போராட்டம்

தர்மபுரி டிச 19,

MRB தொகுப்பூதிய செவிலியர்களின் நிரந்தர நியமன கோரிக்கைக்காக தமிழ்நாடு முழுவதும் போராட்டம்


சென்னையில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது செவிலியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து,



தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முன் அந்தச் சங்கத்தைச் சேர்ந்த செவிலியர்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையின் சிவானந்தா சாலையில் டிசம்பர் 18 அன்று தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

200-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்து கொண்டு பணிநிரந்தரம்,
“சம வேலைக்கு சம ஊதியம்”, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இரவு 7.30 மணியளவில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடுவித்தனர்.

இந்த கைது நடவடிக்கையை கண்டித்து
தருமபுரி மாவட்ட செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் பலர் கலந்து கொண்டு சென்னையில் கைது செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இது தமிழ்நாடு முழுவதும் தொடரும் செவிலியர் சங்க போராட்ட  ஒரு பகுதியாகும்.

2015ஆம் ஆண்டு MRB மூலம் நியமிக்கப்பட்ட 8,000-க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள், இரண்டு ஆண்டுகளில் பணிநிரந்தரம் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தற்போதைய ஆட்சி தனது தேர்தல் அறிக்கையில் அளித்த 356-வது வாக்குறுதியை நிறைவேற்றி, MRB செவிலியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.