
தர்மபுரி டிச 18,
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி ஒன்றிய தொலைத் தொடர்பு அமைச்சர் M.ஜோதிராதித்ய சிந்தியா அவர்களை சந்தித்து, தர்மபுரி மாவட்டத்தில் தொலைத் தொடர்பு சேவை குறைவாக உள்ள பகுதிகளில் டவர்கள் அமைக்கவும், இணைய சேவையை மேம்படுத்தவும் கோரிக்கை மனுவை வழங்கினார்.
தர்மபுரி, அரூர், பென்னாகரம், காரிமங்கலம் உள்ளிட்ட தாலுக்காக்களில் பல ஊராட்சி பகுதிகளில் மொபைல் சேவை மந்தமாகவும், இணைய வசதி குறைவாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்கு பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் துயர்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொலைத் தொடர்பு சேவை குறைவாக உள்ள முக்கியமான பகுதிகளாக அவர் பின்வரும் இடங்களை சுட்டியுள்ளார்:
காரிமங்கலம் தாலுகா: ஜிட்டானள்ளி, ஜக்க சமுத்திரம்.
தர்மபுரி தாலுகா: தொப்பூர் கணவாய் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
பென்னாகரம் தாலுகா: கூக்குட்டமருத அள்ளி (முதுகாம்பட்டி), பெரும்பாலை (சாமத்தல்), தொன்னகுட்டஅள்ளி (சீலநாயக்கனூர்), அஜ்ஜனஅள்ளி (சின்னப்பநல்லூர்).
அரூர் தாலுகா: வேடகட்டமடுவு (கருங்கல்பாடி), சிட்லிங் (வேலனூர்), கீரைபட்டி (வள்ளி மதுரை).இந்த இடங்களில் மக்களின் பயன்பாட்டிற்காக உடனடியாக மொபைல் டவர்கள் அமைத்து, இன்டர்நெட் சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக மக்களுக்காக அவர் வலியுறுத்தியுள்ளார்.














Leave a Reply