Categories

பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா;



பெரியகுளம்  பிப்-10

தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை  பணியாளர்களுக்குஉணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் . இதனை முன்னிட்டு பெரியகுளம் நகராட்சி  கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு பெட்டியினை வழங்கியதுடன், தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கினார். இந்த நிகழ்வில், பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார், பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் தமிஹா சுல்தானா, பெரியகுளம் நகராட்சி அலுவலக பணியாளர்கள், கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள்  என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.