
திருப்பூர் நவ 16,
பட்டா இருந்தும் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இந்து சமய அறநிலையத்துறை நிலங்களை பூஜ்ஜியம் மதிப்பு செய்ததை கண்டித்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சட்டம் இயற்றி உரிமையை மீட்டு தராவிடில் எங்கள் வாக்கு உங்களுக்கு இல்லை என கோஷம் எழுப்பினர்.

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியில் நூறாண்டுகளுக்கும் மேலாக விவசாய பயன்பாட்டில் பத்திரமும் பட்டாவும் இருக்கும் நிலங்களை இனமொழிப்பு சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை பூஜ்ஜியம் மதிப்பு செய்தது இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 2000 மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

தங்கள் நிலங்களை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாகவும் தங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலத்தின் உரிமையை தங்களிடம் இருந்து பறிக்கும் செயலாக இது இருப்பதாக கூறி அல்லாளபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இனம் நல பிரச்சனையில் புதிய சட்டம் கொண்டு வந்து தங்களுக்கு தீர்வு கொண்டு வர வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எங்கள் வாக்கு உங்களுக்கு இல்லை என கோசமிட்டனர்.
பேட்டி ஈசன்.















Leave a Reply