
தர்மபுரி டிச 29,
தர்மபுரி மாவட்டம் அரூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
மாநாட்டுக்கு முன் நீர் மேலாண்மை ஆய்வு
அரூரில் தொழில்பேட்டை, மொரப்பூர் – தர்மபுரி ரயில் இணைப்பு திட்டம், நீர் மேலாண்மை, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த மக்கள் கோரிக்கை மாநாட்டிற்கு முன்னதாக,
மாநில செயலாளர் சண்முகம் நீர் மேலாண்மை தொடர்பான கோரிக்கைகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
ஆக்கிரமிக்கப்பட்ட நர்சனேரி குறித்து பொதுமக்கள் முறையீடு
ஆய்வின் போது, அரூர் அம்பேத்கார் நகரில் உள்ள நர்சனேரி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதையும்,
ஏரியை வழிப்படுத்தும் வாய்க்கால்கள் அடைக்கப்பட்டுள்ளதையும், ஏரியைச் சுற்றி சுற்றுச்சுவருகள் அமைக்கப்பட்டிருப்பதையும் சண்முகம் பார்வையிட்டார்.
அப்போது அவரிடம் பொதுமக்கள் பல்வேறு குறைகளையும், குறிப்பாக இவ்வெல்லாம் பற்றியும் வருவாய் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் குற்றம்சாட்டினர்.
ஏரியை மீட்டெடுக்க குழுவை அமைக்கும் திட்டம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இந்த ஏரியை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் மாநில செயலாளரிடம் வலியுறுத்தினர்.
இதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக, ஏரி ஆக்கிரமிப்பை அகற்றத் தனி குழுவை அமைத்து, அதன் மூலம் தீவிரமான போராட்டங்களை நடத்துவது குறித்து கலந்தாலோசித்து திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி செய்தி ஆசிரியர் உள்ளாட்சி அரசு நாளிதழ்














Leave a Reply