
தர்மபுரி டிச 20,
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சிப்பட்டி பகுதியில் அரசு சொந்தமான ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதி உள்ளது.
வீடற்ற ஏழை மற்றும் எளிய மக்களுக்கு குடியிருப்பு வீடமைப்புக்காக அந்த நிலப்பகுதியை அரசு வீட்டுமனைப் பட்டா நிலமாக ஒதுக்க தீர்மானித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கனரக வாகனங்களின் உதவியுடன் நிலத்தை சமப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த இடத்தில் சமப்பணி நடைபெறும் போது, நிலத்தில் இருந்து எடுக்கப்படும் கற்களை சிலர் சட்டவிரோதமாக கடத்தி வருவதாகவும்,
மண் மற்றும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்
படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக பி.துரிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பொம்மிடி–பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
இருபுறங்களிலும் பேருந்துகள், லாரிகள் மற்றும் பிற வாகனங்கள் நின்று போக்குவரத்து சீர்குலைந்தது.தகவல் அறிந்ததும் பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேசி, விஷயத்தைப் பற்றி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
அதன் பின்னர் சுமார் 20 நிமிடங்கள் நீடித்த சாலை மறியல் முடிவுக்கு வந்தது.














Leave a Reply