Categories

“ரோலக்ஸ்” காட்டு யானை 25 நாட்களுக்கு பிறகு ரேடியோ காலர் பொறுத்தி ஆனைமலை கட்டுக்குள் விடப்பட்டது.


கோவை நவ 13,
தொண்டாமுத்தூர் பகுதியில் பிடிக்கப்பட்ட “ரோலக்ஸ்” காட்டு யானை 25 நாட்கள் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ஆனைமலை வனப்பகுதியில் ரேடியோ காலர் பொறுத்தப்பட்டு விடுக்கப்பட்டது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளைநிலங்களை தொடர்ச்சியாக காட்டு யானை சேதப்படுத்தி வந்தது. மனிதர்களை தாக்கியும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் அடாவடிதனமாக திரிந்த இந்த காட்டு யானைக்கு “ரோலக்ஸ்” என்று பெயரிட்டு அழைத்த பகுதி மக்கள்,  இந்த காட்டு யானையை பிடிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். “ரோலக்ஸ்” காட்டு யானையை பிடிக்க மேற்கொண்ட பல்வேறு கட்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், கடந்த அக டோபர் மாதம் 17ம் தேதி ரோலக்ஸ் காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி  பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து “ரோலக்ஸ்” காட்டு யானை பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யானைகளை பழக்குவதற்காக அடைக்கப்படும் “கிரால் ” எனப்படும் பெரிய மரக்கூண்டில் ரோலக்ஸ் காட்டுயானை அடைக்கப்பட்டு, அதனுடைய உணவு பழக்கத்தை மாற்றும் வகையில் வனப்பகுதியில் மட்டுமே கிடைக்கும் செடி,கொடி மற்றும் மர கிளைகளை உணவாக கொடுக்கப்பட்டது. 25 நாட்களாக தொடர்ந்து கூண்டில் அடைக்கப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை பழக்கப்படுத்தபட்ட பின்பு ரேடியோ காலர் பொறுத்தப்பட்டது. இதனையடுத்து
மந்திரி மட்டம்  என்ற ஆனைமலை வனப்பகுதியில் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டது.
வீடியோ காலர் பொருத்தப்பட்டுள்ள நிலையில் ரோலக்ஸ் காட்டு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க உள்ளனர்.