Categories

சீமான் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு.



புதுச்சேரி நவ‌ 23,

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, எஸ்.ஐ.ஆர் தொடர்பாக கேள்வி கேட்ட கலைஞர் தொலைக்காட்சி நிருபர் ராஜீவ்வை, தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நிரூபர் ராஜீவ் மீது தாக்குதல் நடத்தி  அங்கிருந்து வெளியேற்றினர். இதுகுறித்து நிருபர் ராஜீவ் புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது
296 b (தகாத வார்த்தையில் திட்டுதல்),
115(2)(தாக்குதல்), 351(2)
(கொலை மிரட்டல்) ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.