Categories

சக்தி சாலையில் மாணவர்கள் பஸ்களில் தொங்கி செல்லும் ஆபத்தான பயணம்

ஈரோடு நவ 8,

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புளியம்பட்டியில் இருந்து கோவைக்கு கல்லூரி, தனியார் கம்பெனிகளுக்கும் தினசரி ஏராளமானோர் வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால் காலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் புளியம்பட்டியில் இருந்து கோவைக்கு சென்ற பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்தப் பேருந்தில் சென்ற இளைஞர்கள், மாணவர்கள் சிலர் தனியார் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிய படியும், பின்புற ஏணியில் ஏறி நின்று கொண்டும், ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.  அப்போது படியில் நின்று பயணம் செய்த மாணவர்களுடன் ஏணியில் தொங்கியபடி சென்ற மாணவன் பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் சென்றுள்ளார். இந்த காட்சியை காரில் பயணம் செய்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.  தற்போது அந்த வீடியோ
காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.