Categories

வாணியாறு அணையில் ஆபத்தை பொருட்படுத்தாமல் நீந்திய சிறுவர்கள்
சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி


தர்மபுரி டிச 21,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வாணியாறு நீர்த்தேக்கம் சமீபத்திய மழையால் அதன் முழு கொள்ளளவான
65 அடிக்கு நிரம்பியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பலரும் குடும்பத்துடன் அணைப்பகுதியில் சுற்றுலா வந்தனர்.
அப்போது, அணையின் இடப்புறமாக உபரி நீர் வெளியேறும் பகுதியில் சில சிறுவர்கள் ஆபத்தை பொருட்படுத்தாமல் ஆற்றில் குளித்து நீந்தியதை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த இடம் சேற்றுப் பங்கு மற்றும் கொடி செடிகள் நிறைந்ததாலும், இதில் சிக்கிக் கொண்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என பொதுமக்கள் எச்சரித்தனர்.

தண்ணீரில் இறங்கத் தடை இருப்பதையும் ஆபத்து குறித்து எச்சரிக்கும் பதாகைகள் வைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய விபத்து ஏற்படும் முன்னரே அரசு துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.