
கண்டமங்கலம், டிச.25- கண்டமங்கலத்தில் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் எல் கே கண்ணன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட எம் ஜி யாரின் திரு உருவப் படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,
பின்னர் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் முருகன், ஒன்றியப் பேரவைச் செயலாளர் தமிழ்மணி, ஊராட்சி மன்றத் தலைவர் பத்மநாபன், மாவட்ட நிர்வாகிகள் பழனி, ரமேஷ், மணிமாறன், ஒன்றிய நிர்வாகிகள் பத்மநாபன், பரதன் கண்டமங்கலம் கிளைச் செயலாளர் வேலு, மதிசங்கர் ஜனகராஜ், மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி : விழுப்புரம் மாவட்டம் சிறப்பு செய்தியாளர்














Leave a Reply