Categories

செஞ்சியில் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

விழுப்புரம் டிச 25,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  அன்னமங்கலம்  பெட்ரோல் பங்க் அருகில்  எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு கழக மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர் யோகேஸ்வரன் மலர் தூவி மரியாதை செலுத்தி  சிறப்பித்தனர்.அப்போது மாவட்ட கழக தகவல் தொடர்பு அணி  செயலாளர் நவாப் (எ) நவீன்குமார், மேல்மலையனூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிவராஜ்,   மேல்மலையனூர் ஒன்றிய கழகச் செயலாளர் ராஜேந்திரன், அன்னமங்கலம் கருணாநிதி, கருணாகரன், திடில் ஏழுமலை, விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி : விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர்