Categories

அரூர் தொகுதி மாவட்ட செயலாளர் மீது விசிக நிர்வாகி பரபரப்பு புகார்: பொறுப்பு நியமனத்தில் முறைகேடு!



தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட சி.கே. சாக்கன் சர்மா மீது, கட்சி நிர்வாகி ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பொறுப்புகளை வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், உண்மையான கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் பரபரப்பாகப் புகார் அளித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களால் சமீபத்தில் மாவட்ட செயலாளராக  சாக்கன் சர்மா நியமிக்கப்பட்டார், தொடர்ந்து பல்வேறு மாநில மண்டலப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தொகுதி வாரியாகப் பொறுப்புகளை நியமிக்கும் அதிகாரத்தை மாவட்ட செயலாளர், மண்டல செயலாளர் மற்றும் மண்டலத் துணைச் செயலாளருக்கு வழங்கியிருந்தார்.

இந்நிலையில், நவலை கிராமத்தைச் சேர்ந்த விசிக நிர்வாகி தாமரைக்கணி, மொரப்பூர் பகுதியைச் சேர்ந்தவராகவும், கட்சியின் உழைப்பாளியாகவும் தன்னை அறிமுகப்படுத்தி, மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மாவிடம் ஒன்றிய செயலாளர் பெற மனு அளித்தார். ஆனால், சாக்கன் சர்மா, தங்களுக்கு உரிய பதவி வழங்க முடியாது. நீங்கள் யாரை வேண்டுமானாலும் போய் பார்த்துக்கொள். ஏன் தலைவரை கூட போய் பார்த்துக்கொள். என்னை ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறி மறுத்துவிட்டதாக தாமரைக்கணி கூறுகிறார்.
இதுபோன்று நிறைய உண்மையான கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பதவி வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, தாமரைக்கணி மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா, மண்டல செயலாளர் மற்றும் மண்டலத் துணைச் செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு மின்னஞ்சல் வழியாகவும் இதே புகாரை அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் செய்தியாளர் சந்திப்பின்போது.

“உண்மையான கட்சி  மட்டுமே பதவி வழங்கப்பட வேண்டும். முறைகேடுகளைத் தடுத்து  நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்” என தாமரைக்கணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் புகார் கட்சியின் உள்கட்சி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித் தலைமை இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

பேட்டி
தாமரைக்கணி
தர்மபுரி மாவட்ட தொண்டர் அணி பொறுப்பாளர்