
தர்மபுரி ஜன 15,
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டி கிராமத்தில் படைவீட்டம்மன் கோவில் உள்ளது.

இங்கு 400 ஆண்டுகளாக முன்னோர்களிடமிருந்து தொடர்ந்து வரும் தைப்பொங்கல் திருவிழாவை
400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி வெகு விமர்சையாக கொண்டாடினர்.
பழமைவாய்ந்த பொங்கல் பாரம்பரியம்
படைவீட்டம்மன் கோவில் வளாகத்தில் ஒட்டுமொத்த கிராமமும் ஒன்று கூடி பொங்கல் வைப்பது முன்னோர்களுக்கும் தற்போதைய தலைமுறைக்கும் இடையேயான பழக்கம். தைத்திருநாள் முதல் நாள் நடந்த இந்த விழா, கிராம மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது.
பூஜை, பொங்கல் வைப்பு மற்றும் உற்சாகம்
முதலில் படைவீட்டம்மனுக்கு பூஜை செய்து தீர்த்தம் தெளித்த பின், புது பானைகளில் பச்சரிசி, புதிதாக விளைந்த பயிர்களுடன் ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஆர்வமுடன் பொங்கல் வைத்தனர்.
பானைகளில் பொங்கல் பொங்கியதும் “பொங்கலோ பொங்கல்” என்று ஆனந்த கோஷங்களுடன் அம்மனுக்கு படையல் அளித்து வணங்கினர்.
பலி, நேர்த்தி மற்றும் விருந்து
பொங்கல் வைத்து முடித்த உடன், கோவில் வளாகத்தில் அனைத்து குடும்பங்களும் ஆடு பலி அளித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
அத்தோடு உறவினர்களுக்கு விருந்து படைத்தனர்.
ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த விழாவில் வெளியூரில் உள்ளவர்களும் ஊருக்கு வந்து கலந்து கொள்கின்றனர்.
கிராம ஒற்றுமையின் சின்னமாக விமர்சையாக
நார்த்தம்பட்டியில் ஒட்டுமொத்த பொதுமக்களும் கோவில் வளாகத்தில் ஒன்றுகூடி பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இந்த பாரம்பரியம் கிராம மக்களின் ஒற்றுமையையும் பக்தியையும் வலியுறுத்துகிறது.














Leave a Reply