Categories

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

கோவை நவ 4,

கோவையில், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

கோவையில் நேற்று இரவு விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கல்லூரி மாணவி இரவு 11 மணியளவில் தன் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் ஆண் நண்பரை தாக்கி விட்டு அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி செயலாளரும்,கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.