
வாணியம்பாடி, நவ்.6
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர் காப்புகாடு பகுதியில் வன அலுவலர் சேகர் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த பீமன் வட்டம், ஜார்பெண்டா பகுதியை சேர்ந்த கணபதி (38) என்பவரை வனத்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு அவர் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.














Leave a Reply