Categories

100 நாள் நடைபயணம்: தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

தர்மபுரி நவ 6,

தமிழக மக்களின் உரிமைகளை மீட்க, தலைமுறை காக்க அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் 100நாள் நடைபயணத்தில் இன்று, தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,
கலந்து கொண்டு உரையாற்றிய
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
தமிழக அரசின் நீர் மேலாண்மை மற்றும் வளர்ச்சி கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.
ஈச்சம்பாடி அனையில் தண்ணீர் நிரம்பி வழிந்த போதும், தர்மபுரிக்கு நீர் வழங்காமல் கடலுக்கு தண்ணீர் விடப்படுவதாக குற்றம்சாட்டினார்.
50 டிஎம்சி நீரில் 3 டிஎம்சியை  ஏரிகளுக்குள் விடப்பட்டால், தர்மபுரி வளமாக மாறும்.திமுக அரசுக்கு தர்மபுரி மக்கள் மீது விருப்பமில்லை; அடுத்த தேர்தலில் அந்த 5 தொகுதிகளில் டெபாசிட் இழக்கச் செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார். தனது நாடாளுமன்ற காலத்தில் கடத்தூர் ஏரியை சுத்த படுத்தியதாக கூறிய அன்புமணி, தர்மபுரி–மொரப்பூர் ரயில் திட்டம் இதுவரை நிறைவேற்றாததையும், ஓக்கேனக்கல் குடிநீர் திட்டத்தில் தமிழ்நாடு நிதி வழங்காததை சுட்டிக்காட்டினார்.
நீட் தேர்வு ரத்தாக வில்லை, வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை, மின்சாரத் துறையிலும் ஊழல் நிலவுகிறது என்று குற்றம் சாட்டிய அவர்,
மக்கள் தற்போது திமுக எதிராக எழுந்து வருகின்றனர்.இது அடுத்த தேர்தலில் சுனாமியாக மாறும் என்றும் தெரிவித்தார்.வன்னியர் சமூக இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் ஸ்டாலின் அரசு துரோகம் செய்கிறது என்றும்,
சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் அன்புமணி வலியுறுத்தினார்.

டிசம்பர் 17-ஆம் தேதி வன்னியருக்கு
15 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி
சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட இருப்பதாகவும், மணல் கொள்ளையில்
40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடப்பதாகவும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.