
சிவகாசி, நவ. 7
சிவகாசி பைபாஸ் முக்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடு்க்க வில்லை. மாநகர மேயர் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என விசிக கவுன்சிலர் தங்கபாண்டி செல்வி கோரிக்கை விடுத்தார்.
சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயா் விக்னேஷ்பிரியா காளிராஜன், ஆணையாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி உதவி ஆணையாளர், சுகாதார அலுவலர்கள் , அதிகாரிகள், கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு.
கவுன்சிலர் தங்கபாண்டி செல்வி.
எனது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடத்தபட்டது. முகாமில் 5 பேருக்கு ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பம் வழங்க பட்டது. ஆனால் அதிகாரிகள் அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கம் போல் காலதாமதம் செய்கின்றனர். இதே போல் பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதப்படுத்தி வருகின்றனர். மேயரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இதனை நான் கூட்டத்தில் தெரிவிக்கிறேன்.
மேயர் சங்கீதா இன்பம்
அதிகாரிகளிடம் பேசி உடனடியாக அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
கவுன்சிலர் ஸ்ரீநிகா.
மாநகராட்சி கூட்ட அஜண்டாவில் உள்ள அனைத்து தீர்மானத்தையும் தனிதனியாக மாநகராட்சி ஊழியர் படிக்க வேண்டும். அப்போதுதான் தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடத்த ஏதுவாக இருக்கும் என்றார். இதை தொடர்ந்து மாநகராட்சி கூட்ட பொருளில் உள்ள அனைத்து தீர்மானங்களும் தனி தனியாக படித்து விவாதம் நடத்த பட்டதால் சுமார் 3 மணிநேரம் வரை கூட்டம் நடைபெற்றது.
கவுன்சிலா சேதுராமன்
மாநகராட்சியில் அனைத்து பணிகளுக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். சமானிய மக்கள் வீட்டு தீர்வை பெற வேண்டுமானால்அதிகாரிகள் ரூ.50ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகின்றனர். மாநகராட்சியில் எந்ததெந்த பணிக்கு எவ்வளவு லஞ்சம் தர வேண்டும் என எண்ணிடம் பட்டியல் உள்ளது. இதனால் மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுகிறது. சுகாதார பணிகள் எதுவும் முறையாக நடைபெறவில்லை. ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையாளர் சரவணன்
கவுன்சிலரின் குற்றசாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க படும்
கவுன்சிலர் மகேஸ்வரி
மாநகராட்சி அண்ணா காய்கறி மார்கெட்டில் உள்ள கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க மாநகராட்சி உதவியாளர் குமார் ஒரு கடைக்கு ரூ.15 ஆயிரம் வீதம் வசூல் செய்து வருவதாக குற்றசாட்டு கூறப்படுகிறது. ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பின்னர் ஒட்டு மொத்த கவுன்சிலர்களும் தனியாருக்கு விடப்பட்ட குப்பைஅகற்றும் பணியின் டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். அப்போது மேயர் சங்கீதா இன்பம் டெண்டரை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக கவுன்சிலர்களிடம் தெரிவித்தார்.















Leave a Reply