Categories


பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் பரிதாபம் மொபட் மீது எலக்ட்ரிக்கார் மோதியதில்-2பேர் பலி, 3பேர் படுகாயம்


பொள்ளாச்சி – நவ- 7
பொள்ளாச்சி அருகே
கிணத்துக்கடவு அடுத்துள்ள கோவில்பாளையம், காளியண்ணன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் வயது (56) இவர் கூலி தொழிலாளி.இவர்  தனது மனைவி ஜோதி (46)இவர்களது மகள் திருப்பூர் மாவட்டம் ,மூலனூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரது மனைவி சந்தியா (25) இவரது மகள் கனிஷ்கா (3) மகன் கவீஸ் (1) ஆகிய 5பேரும் ஒரு மொபட்டில் கோவை &பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கோவில் பாளையம் வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவை ,காமராஜர்புரம், கிருஷ்ணசாமி ரோடு பகுதியில் வசித்து வரும் துரைராஜ் (60) என்பவர் எலக்ட்ரிக் காரை ஓட்டி வந்தபோது கார் எதிர் திசையில் வந்த மொபட் மீது எதிர்பாராதவிதமாக பலமாக மோதியது. இதில் மொபட்டில் வந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்தில் முருகேசன் அவரது பேத்தி கனிஷ்கா ஆகிய இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த ஜோதி,சந்தியா, ஒன்றரை வயது ஆண் குழந்தை ஆகியோர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் . இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.