
திருப்பத்தூர் நவ 8,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அதியமான் இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு துணை ராணுவ பணியில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.இவருக்கு திருமணம் ஆகி வசந்தி என்கின்ற மனைவியும், கார்குழலி, தாமரை செல்வன் ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளன.இவர் துணை ராணுவ வீரர் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மணிப்பூரில் இருந்து அவருடைய சொந்த ஊரான வாணியம்பாடி பகுதிக்கு வரும் பொழுது நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் இறங்கி மீண்டும் ஏறும்போது தவறி கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.

அங்கிருந்த ரயில்வே காவல்துறையினர் அவரை மீட்டு விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து அதியமான் துணை ராணுவ வீரரான மனைவி வசந்திக்கு தகவல் தெரிவித்தனர்.மனைவி மற்றும் உறவினர்கள் விஜயவாடாவிற்கு சென்று பார்க்கும் பொழுது இவர் மரணம் அடைந்ததை உறுதி செய்து பின் அங்கிருந்து சொந்த ஊரான வாணியம்பாடி கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக துணை ராணுவ டிஎஸ்பி நித்தியானந்தன், மற்றும் இன்ஸ்பெக்டர் ராமுலோ தலைமையில் 16 ராணுவ 77 பட்டாலியன் SRPF சேர்ந்தவர்கள் இறுதி சடங்கின் போது இறந்த துணை ராணுவ வீரரான அதியமான் உடலுக்கு தேசிய கொடி போர்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி 21 குண்டு முழங்க மரியாதை செலுத்தினர் அதன் பின்னர் மேட்டுப்பாளையம் பாலாற்றங்கரையில் அவரது உடல் கேட்டு எரிக்கப்பட்டது..














Leave a Reply