Categories

பிஏபி கால்வாய் உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர் – ஆட்சியர் மற்றும் முன்னாள் அமைச்சரிடம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை.



திருப்பூர் நவ 13,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில் பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து 4வது மண்டல தண்ணீர் திறந்து 3 மாதமாக சென்று கொண்டிருக்கும் வாய்க்காலில் தற்போது 74 வது கிலோமீட்டர் ஆன இப்பகுதியில் கரை உடைந்து தற்போது விவசாய நிலங்கள் மற்றும் ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மணீஸ் நாரணரேவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார், அப்போது அவரை இப்பகுதி விவசாயிகள் முற்றுகையிட்டு நிவாரணம் கோரினர், தொடர்ந்து பல்லடம் MLA M.SM ஆனந்தன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும் அனைவருக்கும் உரிய நிவாரணம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதிமுக ஆட்சி காலத்தில் குடி மராமத்து பணிகள் தொடங்கப்பட்டது, ஆனால் தற்போது அதை நிறுத்திவிட்டனர், பாதிப்படைந்த அனைவருக்கும் தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


பேட்டி: MSM. ஆனந்தன், முன்னாள் அமைச்சர்