
சேலம் நவ 15,
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை கல்லாங்காடு பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவருடைய தோட்டத்திற்கு கூலியாட்கள் விவசாய பணிக்கு வந்துள்ளனர் , அப்போது தோட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்த நபர் ஒருவர் அருகில் இருந்த 50 அடி ஆழமுள்ள 5 அடி தண்ணீரில் தவறி விழுந்துள்ளார் .

இதைக்கண்ட சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து ஆத்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்,கிணற்றில் தவறி விழுந்த நபரை உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.














Leave a Reply