
சேலம் நவ 18,
விவசாயிகளையும், நிலத்தடி நீரையும் பாதிக்கும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும்.. இல்லையென்றால் கால்நடைகளுக்கு தண்ணீர் தீவனம் கிடைக்காத நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை…

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 119 ஏக்கர் பரப்பளவில் 880 கோடி மதிப்பீட்டில் அதிநவீன ஜவுளி பூங்கா அமைப்பதற்கான தொடக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கப்பட உள்ளதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் முழுமையாக அழிந்துவிடும்,எனவே இந்த சாயப்பட்டறை அமைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி பல்வேறு விவசாயி அமைப்பினர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் ஜவுளி பூங்காவில் அமைக்கப்பட உள்ள சாயப்பட்டறை திட்டத்தை கைவிட வேண்டும்,ஜவுளி பூங்கா திட்டத்தை வேறு பகுதியில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்,பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கருப்பு பேட்ச் அணிந்தும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இவர்களுக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அருள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்கள்.
அரசு சாயப்பட்டறை அமைக்கும் திட்டத்தை கைவிடும் வரை எங்களுடைய போராட்டம் அடுத்தடுத்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.














Leave a Reply