Categories

நாய்க்கனேறி மலை சாலையில் வாகன சோதனையில் நிற்காமல் சென்ற கார் பறிமுதல் ஒருவர் கைது.



ஆம்பூர்.டிச.6-

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி மலைச்சாலையில் வனத்துறை சரக அலுவலர் பாபு தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்திய போது நிற்காமல் சென்றதால் வனத்துறையினர் துரத்தி சென்ற போது கார் நாய்க்கனேரி புது எரியூர் கிராமத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.
காரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய மூவரில் நாய்க்கனேரி நடுவூர் கிராமத்தை சேர்ந்த சுதீப் என்பவர் கைது செய்து அவனிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.