
தருமபுரி டிச 8,
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் ஆர்ப்பாட்டத்தின்போது காவலரைக் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு தக்காளி சந்தை அருகே புதிதாக திறக்கப்பட்ட சொகுசு மதுபான கூடத்தை (மனமகிழ் மன்றம்) அகற்றுமாறு கோரி, தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது நுழைவாயிலில் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினரை மீறி, சில தொண்டர்கள் உள்ளே நுழைந்து மதுபானக் கூடத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு, ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர். .
அப்போது தகரத்தின் மீது ஏறிய தவெக தொண்டரை கீழே இறக்க முயன்றபோது, ஜெமினி என்ற தொண்டர் அங்கு இருந்த காவலர் ஒருவரின் கையை கடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாலக்கோடு காவல்துறையினர் ஜெமினி உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் ஜெமினி, ஜெயபிரகாஷ், கணேசன், கிருஷ்ணன், வினோத்குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














Leave a Reply