Categories

டேங்கர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு – 15 பேருக்கு காயம்

கிருஷ்ணகிரி டிச 11,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் உள்ள டாடா நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நள்ளிரவு வேலை முடிந்து சுமார் 40 பேர் கொண்ட தனியார் நிறுவன பேருந்தில் பாலக்கோடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.

பேருந்தை சாரத்குமார் (30) என்பவர் ஓட்டி சென்றபோது, பாலக்கோடு கர்த்தாரப்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்தபோது பின்னால் வந்த கேஸ் டேங்கர் லாரி பேருந்தின் பின்புறம் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் குட்டம்பட்டியை சேர்ந்த முத்துசாமி (32), சோமனஅள்ளியை சேர்ந்த அஸ்வினி (19), பிரியா (24), நிர்மலா (22), மலர்கொடி (28), கர்த்தாரஅள்ளியை சேர்ந்த தீபா (23), ஹௌசிங் போர்டு பகுதியை சேர்ந்த பிரியா (26), கொல்லப்பட்டியை சேர்ந்த சதீஷ் (22), கன்நத்தம் பகுதியை சேர்ந்த அருள் (32), பி.கொல்லஅள்ளியை சேர்ந்த பேரரசன் (19), சோமனஅள்ளியை சேர்ந்த வல்லரசு (25), முனியப்பன் (25) மற்றும் ஆத்தூரை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் மாரிமுத்து (55) உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர்



தகவல் அறிந்ததும் பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே முத்துசாமி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.