
தர்மபுரி டிச 11,
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் பஞ்சாயத்து மக்கள், கோட்டப்பட்டி–சிட்லிங் சாலை சீரமைப்பை கோரி இன்று மறியல் நடத்தினர்.
மலைவாழ் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளிலிருந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிட்லிங் பஞ்சாயத்து 24 பழங்குடி கிராமங்களைக் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதி ஆகும். இங்கு 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரை உள்ள 8 கிலோமீட்டர் தார் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து, போக்குவரத்து மற்றும் விவசாய உற்பத்தி கடத்தல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
மழைக்குப் பின் பல இடங்களில் பெரிய பள்ளங்கள் உருவாகி, நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுஇதனால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்கள் சிரமத்துடன் சகதிப்பாதையில் பயணிக்கின்றனர்.

மருத்துவம், கல்வி போன்ற அவசியங்களுக்கான அணுகலும் பெரும் சவாலாகியுள்ளது.
மக்கள், கடந்த மூன்றாண்டுகளாக சாலை சீரமைக்க கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.
வனப்பகுதி வழியாகச் செல்லும் இந்த சாலை, திருவண்ணாமலை–சேலம் பிரதான சாலையுடன் இணைப்பதனால் கனரக வாகனங்கள் அடிக்கடி சென்றுவருவது சாலையின் மேலும் சேதத்திற்கு காரணமாகியுள்ளது
வருவாய்த் துறை சாலை சீரமைப்புக்கான முன்மொழிவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை நடைமுறையில் மாற்றமில்லாததால் மக்கள் சாலை மறியல் நடத்தி, உடனடி சீரமைப்பை வலியுறுத்தினர்.
மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், “மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புறக்கணிக்கிறது” என குற்றம்சாட்டுகின்றனர்.
தரமான தார் சாலை அமைத்து, குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பாதுகாப்பாக பயணிக்க வழிசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த பிரச்சனை குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் மனுக்கள் அனுப்பியிருந்தும், எந்த பதிலும் இல்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை கவனிக்காதது, அவர்களை புறக்கணிக்கும் செயல் என அப்பகுதி மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.















Leave a Reply