
அரூர், டிசம்பர் 20:
அரூர் அருகே இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (53) மரணமடைந்தார்.
ஜெயப்பிரகாஷ் அருகே நீண்ட காலமாக அந்தப் பகுதியில் சிகை அலங்காரக் கடை நடத்தி வந்தவர். அவர் தனது குடும்பத்துடன் அரூர் டிஎன்சி திரையரங்கம் அருகே வசித்து வந்தார்.இன்று காலை குடும்பத் தேவைக்காக உணவுப் பொருட்கள் வாங்கக் கிளம்பிய அவர், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த
போது தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து அதி வேகமாக மோதியதால் உடல் நசுங்கி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஜெயப்பிரகாஷின் மரணம் குறித்து அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
குடும்பத்தினரின் அழுகை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
அரூர் காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பிரேத உடலை கைப்பற்றிய போலீசார் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:
“சமீப காலமாக அரூர் பேருந்து நிலையத்திலிருந்து கச்சேரி மேடு நான்கு ரோடு வரை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவதும், கடைகள் சாலையோரத்தில் அமைந்துள்ளதும் முக்கிய காரணமாக உள்ளது.
இதனை பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என கூறினர்.
அரூர் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.














Leave a Reply