
கள்ளக்குறிச்சி டிச 21,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்திய விபத்து நிகழ்ந்தது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று கொண்டிருந்த டூரிஸ்ட் பஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளாகி நின்றது. பேருந்தில் பயணம் செய்த ஓம் சக்தி சுவாமிகள், ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.
விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்தை மீட்க கிரேன் எந்திரம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டார். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.
திடீர் விபத்தால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் நிலையை கவனித்து வந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
உயிர் சேதம் ஏதும் இல்லாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தாலும், தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.














Leave a Reply