Categories

விசிக கோவை மண்டல செயலாளர் சுசி கலையரசன் கூட்டணி கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி கோவை மண்டல செயலாளராக நியமனம் செய்யப்பட்ட சுசி.கலையரசன் மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார், வடக்கு மாவட்ட தலைவர் ரங்கராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோவை மாவட்ட செயலாளர் சிவசாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


அப்போது 2026 சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது மற்றும் எஸ்.ஐ.ஆர் பணிகளை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடந்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ஸ்டீபன் சுந்தர்,மண்டல துணை செயலாளர்கள் வழக்கறிஞர் துரை இளங்கோவன்,தங்கவேலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் நாதன்,கதிரேசன், பிரவின், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர்கள் பாஸ்கர்,தமிழ்செல்வன்,மாவட்ட பொதுச்செயலாளர் பாசமலர் சண்முகம், கோவை மாவட்ட பொதுச்செயலாளர் ஆனந்த்,வடக்கு மாவட்ட செயலாளர் விஜிபி நட்ராஜ் ஆகியோர் உடனுள்ளனர்.