
கோவை நவ 26,மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (GST) கோவை ஆணையரகம் சார்பில், வரி செலுத்துவோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘100 நாட்கள் – சஹஜ் கர் சம்வாத்’ (Sahaj Kar Samvad) நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய ஜி.எஸ்.டி. கோவை ஆணையரகம் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) கோவை கிளை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி, துடியலூரில் உள்ள ICAI பவனில் நடைபெற்றது.

இதில், கோவை ஜி.எஸ்.டி. முதன்மை ஆணையர் தினேஷ் பி. பங்கர்கர், IRS, முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, ICAI-ன் 2011–12ஆம் ஆண்டு தலைவராகப் பணியாற்றிய சி.ஏ. ஜி. ராமசாமி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் வரி செலுத்துவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குதல், கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெறுதல், வரி தொடர்பான திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் உள்ளிட்ட நோக்கங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக கோவை உதவி ஆணையர் (GST) கிரண் சயேம்பு, IRS மற்றும் ICAI CBE தலைவர் சி.ஏ. சர்வஜித் எஸ். கிருஷ்ணன் ஆகியோர் செயல்பட்டனர்.
வரி செலுத்துவோர் மற்றும் தொழில் முனைவோருக்கு வரி நடைமுறைகள் குறித்த தெளிவையும், தேவையான ஆதரவையும் வழங்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.














Leave a Reply