Categories

“ரேஷன் கடையா, மது பாரா?”நியாயவிலை கடையின் அவல நிலை

சென்னை டிச 23,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூரில் செயல்பட்டு வரும் பகுதி நேர நியாய விலை கடை தற்போது குடிகாரர்களின் கூடாரமாக மாறி பரிதாப நிலையை எட்டியுள்ளது
புதன் மற்றும் வியாழன் ஆகிய குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறக்கும் இந்த நியாய விலை கடை வழியாக அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஆனால், கடை மூடிய நாட்களில் அருகே உள்ள வெங்கடசமுத்திரம் அரசு மதுபானக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கும் சிலர், அந்த நியாய விலை கடை வளாகத்திலேயே அமர்ந்து நாள் முழுவதும் மதுபானம் அருந்துவது வழக்கமாகிவிட்டது.



இதனால் கடை சுற்றுப்புறம் மாறி, பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள், மற்றும் துர்நாற்றம் வீசும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது.

சிலர் அந்த இடத்திலேயே சிறுநீர், மலம் கழிக்கும்  நிலையையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலைமையால் ரேஷன் பெற வருவோர் பெரும் சிரமத்தையும்,  அனுபவிக்கின்றனர்.

“இது மக்கள் பயன்பாட்டுக்கான நியாய விலை கடையா, இல்லையா மது விற்பனை நிலையமா?” என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது.

பகுதி மக்கள் தெரிவித்ததாவது,

“நியாய விலை கடை வளாகத்தில் குடித்து அசிங்கப்படுத்தும் குடிகாரர்கள் மீது பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த இடத்தில் சுத்தம் செய்து பொதுமக்கள் பாதுகாப்புடன் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.