Categories

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தைச் சிதைக்கும் பாஜக அரசைக் கண்டித்து
விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!



தருமபுரி | கடத்தூர் டிச 24,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் – 2005 (MGNREGA)-ஐச் சிதைக்கும் நோக்கில் புதிய சட்ட மசோதாவைக் கொண்டு வரும் பாசிசப் பாஜக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்தியா (INDIA) கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
(BDO Office) முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக மேலிடப் பொறுப்பாளர் ‘களப்போராளி’ பொ.மு. நந்தன்  தலைமை தாங்கி, மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து கண்டன உரையாற்றினார்.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசின் சதியை முறியடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பாஜக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.