
சேலம் டிச 27,
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின், சேலம் மாவட்ட தலைவர் இந்தியநாதன் மற்றும் இணைப்பு சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட, மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பணி நிரந்தரம், பழைய ஓய்வூதிய திட்டம், கால முறை ஊதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு உயர்வு, உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, இந்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.














Leave a Reply