Categories

அரூரில் அரசு கல்லூரி விடுதி தேவை:
மாநில செயலாளர்
பெ. சண்முகம் கோரிக்கை

தர்மபுரி டிச‌30,

மாநில செயலாளர்
பெ. சண்முகம் பேசியதாவது:

இளைஞர்கள் படிப்பதற்கு பல தலைமுறைகளுக்கு அடிப்படையாக அரூரில் அரசு கல்லூரி உள்ளது. இங்கு 900 மாணவர்கள் படித்து வருகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகள் இங்கு கல்லூரி இல்லாவிட்டால் படிக்க முடியாது. இன்று இந்த கல்லூரி இருப்பதால் மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்கின்றனர்.

இங்கு மாணவர் விடுதி உருவாக்கப்படவில்லை. இது பழங்குடி மக்கள் படிக்க ஏதுவாக இருக்கும். தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதி கொண்டுவரல. அவர்களுக்கு அந்த சிந்தனை இல்லை. எனவே, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு மாணவர் விடுதி அறிவிப்பை வெளியிட வேண்டும்.

“சமூக நீதி விடுதி” என்ற பெயரில் கட்ட வேண்டும். இது வரவேற்கத்தக்கது. இது மாணவர்களின் படிப்பை உயர்த்தி, உயர் படிப்புக்கு உதவும்.கௌர பேராசிரியர்களுக்கு நிரந்தர பணி மற்றும் சம ஊதியம்நிரந்தர பேராசிரியருக்கு
ரூ.1 லட்சம் சம்பளம். கௌர பேராசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் – ரூ.18,000 மட்டுமே.
அதே வேலையை இவர்களும் செய்கின்றனர்.


நிரந்தர பேராசிரியர்களை விட கௌரவபேராசிரியர்கள் அதிகம்.

கௌரவபேராசிரியர்கள் அதிக ஆண்டுகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு கல்வி முன்னேற்றம் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்துக்கு உதவும்.
இது வீண் செலவு அல்ல.

இடைநிலை ஆசிரியர், செவிலியர் போராட்டங்களை அடக்க முயற்சி கண்டனம்


கடந்த 4 நாட்களாக இடைநிலை ஆசிரியர் போராட்டம் நடக்கிறது. 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் 15 வருடங்களாக “சம வேலைக்கு சம ஊதியம்” கேட்டு போராடுகின்றனர். திமுக அரசு பல கோரிக்கைகளை நிறைவேற்றியதாக சொல்கிறது.

ஆனால் “சம வேலைக்கு சம ஊதியம்” தேர்தல் வாக்குறுதி. போராட்டத்தை பேச்சு வழியில் முடிவுக்கு கொண்டு வராமல் காவல்துறையால் அடக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உரிய காலத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் 7 நாட்கள் செவிலியர் போராட்டம் நடத்தினர். ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றினர்.

இது கடுமையான பணி. தமிழ்நாட்டில் மருத்துவமனை கட்டமைப்பு சிறப்பானது. மருத்துவமனைகள் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளன.

சுத்தத்துக்கு கட்டமைப்பு உள்ளது. இதை இயக்க மனித சக்தி தேவை. ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

போராடும் உரிமை இந்திய அரசியலமைப்பு வழங்கியது.

போராட வேண்டாம் என்பது அரசியலமைப்புக்கு விரோதம்.

போராட்டத்தில் காவல்துறையை கட்டுப்படுத்த வேண்டும். அதிகாரிகளின் அணுகுமுறை, காவல்துறை-வருவாய்த்துறை செயல்பாடு ஆட்சியாளர்களுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும்.

இவர்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். சில பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

உரிய முறையில் கண்காணித்து துணிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா:


மார்க்சிஸ்ட் கட்சி முயற்சி கடந்த 16-ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்தோம். புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க மாநில அளவில் குழு அமைப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

இந்த குழு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கும்.

இது வரவேற்கத்தக்கது. 60 ஆண்டுகளாக “பெல்ட் ஏரி” என்று நகராட்சி-மாநகராட்சி பட்டா வழங்கவில்லை. இப்போது பெல்ட் ஏரியாவிலும் பட்டா வழங்கலாம் என அறிவித்துள்ளது.

நீர்நிலை புறம்போக்கு குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம். நகர்புற கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு விற்கும் வகையில் அரசாணை. இது வரவேற்கிறோம்.

ஆனால் அதிக தொகை கொடுக்க வேண்டும். எனவே மார்க்கெட் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் புறம்போக்கில் வாழ்கின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி எடுத்துள்ளது.
பட்டா கிடைக்கும் வரை போராடுவோம்.



மத்திய பாஜக அரசின் தவறுகள்:


நூறு நாள் வேலை, கல்வி உரிமை ஒன்றிய பாஜக அரசு கடந்த 11 ஆண்டுகளாக உள்ளது. 2005-ல் இடதுசாரி முயற்சியால் நல்ல சட்டங்கள் கொண்டுவந்தோம். பாஜக திருத்தம் செய்கிறது.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை வழங்க “நூறு நாள் வேலை” சட்டமாக்கப்பட்டது.

இதை ரத்து செய்ததை சீமான் போன்றோர் கொண்டாடுகின்றனர்.

ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யாமல் 86 ஆயிரம் பணக்காரர்களுக்கு 16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.


நாட்டு விடுதலைக்கு அர்ப்பணித்த காந்தியடிகள் பெயரை நீக்கியதை அதிமுக வரவேற்கிறது.

மத சார்பின்மை கோட்பாட்டை வலியுறுத்திய காந்தியை கொன்ற கோட்சோ. 78 ஆண்டுகளுக்குப் பின் காந்தி பெயரை நீக்கி “வி.பி.ஜி. ராம்” என்று சூட்டினர்.

நூறு நாள் என்ற போது குறைவான நாட்கள் கொடுத்தனர் – சராசரியாக 35-45 நாட்கள். இப்போது 125 நாட்கள் என்று ஏட்டில் எழுதியுள்ளனர்.

இது மக்களை ஏமாற்றல். பாஜக ஏழைகளுக்கு எதிரானது, கார்ப்பரேட்டு களுக்குள்
ஆதரவானது.

ஆரவல்லி மலைத்தொடர் பச்சை கடம்பம் என்று பெருமையாக பேசுவார்கள். இதில் கனிம வளம் உள்ளது. விற்றால் ஆயிரம் கோடிகள் கொள்ளை அடிக்கலாம். 100 மீட்டர் வரை எடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி. ஏழைகள்-பழங்குடிக்கு நிலம் கேட்கும்போது சுற்றுசூழல் என்று யோசிக்கின்றனர். ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு எதுவும் செய்வார்கள்.

2005 கல்வி உரிமை சட்டம், 2006 வன உரிமை சட்டம் பழங்குடிக்கு சாதகம். இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றால் பழங்குடியினருக்கு பட்டா வழங்கலாம்.

அரூர் ஏரி மீட்பு மற்றும் உள்ளூர் சிக்கல்கள்

அரூரில் காலனிக்கு அருகில் உள்ள நரசனேரியை காணோம்.
இது ஆக்கிரமிப்பு. கரையை உயர்த்தி தூர்வாரினால் அரூர் ஒன்றியத்துக்கு தண்ணீர் கிடைக்கும்.

இந்த ஏரியை மீட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்.

வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் குழு அமைத்து காணாமல் போன ஏரியை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்களே மீட்போம்.


வாச்சாத்தி தீர்ப்பு வந்து காலம் ஆகிவிட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதிக்கு வேலை-நிவாரணம் கிடைத்தது.


ஒட்டுமொத்த கிராமமும் பாதிக்கப்பட்டது. அனைவருக்கும் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்.


அதிமுக-பாஜக விமர்சனம்:



தேர்தல் கூட்டணி எதிர்ப்பு வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி சேர்ந்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிறது.

அதிமுக “தீய சக்தி திமுக” என்று சொல்கிறது. ஆனால் விஜய் எதிராக போராட்டம் நடத்திய தில்லை மக்களுக்கு போராட்டம் நடத்திய தில்லை. ஏழை விவசாயிகளை அடிக்கிறார்.

நாட்டை கொள்ளையடிக்கும் பாஜகவை “தீய சக்தி” என்று சொல்லவில்லை. பாஜக எதை சொன்னாலும் ஆதரிக்கிறது எடப்பாடி பழனிச்சாமி.திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தில் வழக்கமான தீபம் ஏற்றப்பட்டது.

ஆர்எஸ்எஸ் தீபம் ஏற்கவில்லை என்று புலம்புகின்றனர்.
இதிலும் எடப்பாடி ஆர்எஸ்எஸ் வாதத்தை ஆதரிக்கிறார்.

வழக்கமான இடத்தில் ஏற்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் ஏற்கப்பட்டது.
இப்போது கண்டும் காணாமல்.



உயர்நீதிமன்றம் சொன்னால் மக்கள் ஒற்றுமை சீரழியும் என தமிழக அரசு முடிவு. 1930-ல் நீதிமன்றம் வழக்கமான இடத்தில் ஏற வேண்டும் என தீர்ப்பு. நீதிமன்றம் அமல்படுத்தியிருந்தால் தமிழ்நாடு அமைதியாக இருந்திருக்கும்.

மதத்தை நேசிக்கும் கூட்டம் மனித உயிர்களை பலி கொடுக்கும் கூட்டம். ஆர்எஸ்எஸ்-பாஜக-அதிமுக ஆட்சிக்கு வந்தால் அழித்துவிடுவார்கள்.

8 காங்கிரஸ் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி
4 இடத்தில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது.

அதிமுக-பாஜக வெற்றி பெறுவது இப்படி நடக்கும். சதி திட்டத்தை முறியடித்து ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும். மதவெறி சக்திகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது.

செய்திசெய்தி ஆசிரியர் உள்ளாட்சி அரசு நாளிதழ்