Categories

ஈரோட்டில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் சொர்க்க வாசல் வழியாக வெளியில் வந்தார்.




ஈரோடு டிச‌30,
ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, கடந்த டிச., 29 ல் பகல் பத்து உற்சவத்துடன் துவங்கியது. கடந்த பத்து நாட்களாக உற்சவர் மூலவர் கருவறையிலிருந்து பக்தர்கள் அருள் பாலித்தார். நேற்று முன் தின இரவு நம்பெருமாள் கருவறையில் இருந்து வெளியில் வந்து, கல் மண்டபத்தில் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று அதிகாலை, 2:45 மணிக்கு, கஸ்துாரி அரங்கநாதருக்கு திருமஞ்சனம், மஹா தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடும் நடந்தது. அதைத்தொடர்ந்து, 4.30 மணிக்கு சொர்க்க வாசல்  திறக்கப் பட்டது. இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர்
அஞ்சுதம் 
கஸ்துாரி அரங்கநாதர் குழுதலைவர்கள்சண்முகம், ராவணன், ஹரி , சுந்தர்ராஜன்,
முன்னின்று வாசல் கதவை திறந்தார்.  ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்துாரி அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளியபடி சொர்க்கவாசல் வழியாக வெளியேறி, கோவிலை வலம் வந்து திருவீதி உலா புறப்பட்டார். இதில் ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ். வீதி பி.எஸ்.பார்க், மீனாட்சிசுந்தரனார் சாலைல கமராஜன் வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தார். வழி நொடுகிலும் வீடுகளில் இருந்த பக்தர்கள் அரங்கனை தரிசித்து வழிட்டனர். சுவாமியை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலை, அலையாக சொர்க்க வாசலை கடந்து சென்றனர்.கோயில் கமிட்டி தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார்,
அஇஅதிமுக தென்னரசு  நிகழ்ச்சியில்  உள்ளிட்ட  அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வரும், , முத்தங்கி சேவையும், நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 
––––––