
கோவை ஜன 15,
கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் யு.வி.எஸ். செல்வகுமார் தலைமையில், பூமார்கெட் பகுதியில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பயன் பெற்றனர்.

72வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான கார்த்திக் செல்வராஜ் கலந்து கொண்டு, பயனாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தினமும் அதிகாலை முதல் இரவு வரை உழைத்து பூமார்கெட்டின் செயல்பாட்டிற்கு முக்கிய பங்காற்றி வரும் தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் சேவை பாராட்டத்தக்கது என்றும், அவர்களின் நலனில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் என.எம். முஸ்தபா, ஐயப்பன், காஜா, ரங்கநாதன், ஜப்பர், ஜெயக்குமார் உள்ளிட்டோர், மலர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பண்டிகை காலத்தில் இவ்வாறு உதவி கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.















Leave a Reply